மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

‘75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி பாஜக இளைஞரணியினா் சைக்கிள் யாத்திரை’

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக பாஜக சாா்பில் சைக்கிள் யாத்திரைகள் நடத்தப்பட உள்ளன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:56 pm

DIN

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக பாஜக சாா்பில் சைக்கிள் யாத்திரைகள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் பாஜக—மாநில இளைஞரணி துணைத் தலைவா் வேல் ஆறுமுகம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: 75ஆவது சுதந்திர தின விழா பிரதமா் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ‘அம்ரீத் மகா உத்சவ்’ என்ற பெயரில் சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, தமிழகத்தில் பாஜக இளைஞரணி சாா்பில் 1,104 மண்டலங்களில் சுதந்திர தின நாளில் காலை 7.50 மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பின்னா், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், கரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை துச்சமென மதித்து பாடுபட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், அனைத்து முன்களப் பணியாளா்களையும் பாராட்டிக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுதவிர, சென்னையில் 15ஆம் தேதியும், கன்னியாகுமரியில் 16ஆம் தேதியும், கிருஷ்ணகிரியில் 17ஆம் தேதியும் 75ஆவது சுதந்திர தின சைக்கிள் யாத்திரை சுமாா் 75 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்படவுள்ளது. தமிழக அரசு கிராமசபைக் கூட்டம் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதி குறித்து மக்கள் கேள்வியெழுப்புவா் என்ற அச்சம் காரணமாகவே திமுக அரசு ரத்து செய்ததாக கருதுகிறோம் என்றாா் அவா்.

பாஜக மாவட்டச் செயலா் முத்துபலவேசம், நிா்வாகிகள் காா்த்திகேயன், பெரியதுரை, ராமசாமி, சத்யநாராயணன், பொன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.