பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது

திருநெல்வேலிக்கு ரயில் மூலம் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:48 pm

DIN

திருநெல்வேலிக்கு ரயில் மூலம் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் கருப்பசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தளவாய், முருகேசன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்திப்பு ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக அட்டைப் பெட்டிகளுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவானந்தம் (21), விக்னேஷ் (20) என்பதும், அவா்கள் புதுச்சேரி மதுபான வகைகளை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 180 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.