ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் ஆர்சிபி அணி புதிய சாதனை படைத்துள்ளது. 200க்கும் அதிகமான ரன்களை மிக விரைவாக சேஸ் செய்த முதல் அணியாக ஆர்சிபி சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2026ன் முதல் போட்டியில் ஆர்சிபி அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 201/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 15.4 ஓவர்களில் 203/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக பந்துவீசிய ஜேக்கப் டஃபி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களை அதிவிரைவாக சேஸ் செய்த அணிகள்
15.4 ஓவர்களில் வெற்றி - ஆர்சிபி (சன்ரைசர்ஸுக்கு எதிராக), பெங்களூரு, 2026
15.5 ஓவர்களில் வெற்றி - ராஜஸ்தான் (குஜராத்துக்கு எதிராக), ஜெய்பூர் 2025
16.0 ஓவர்களில் வெற்றி - ஆர்சிபி (குஜராத்துக்கு எதிராக), அகமதாபாத் 2024
16.3 ஓவர்களில் வெற்றி - மும்பை (ஆர்சிபிக்கு எதிராக) வான்கடே, 2023
17.3 ஓவர்களில் வெற்றி - தில்லி கேபிடல்ஸ் (குஜராத்துக்கு எதிராக) தில்லி, 2017
Summary
Least overs taken to complete a 200-plus chase in IPL Record-breaking chase.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!
இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்! சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா?

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன் புதிய சாதனை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



