நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட இந்தியா முழுவதும் உள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
முதல் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்திருந்த சென்னை அணி, அடுத்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இதுவரை இரண்டு சதங்கள் விளாசி சிறப்பாக விளையாடி வருகிறார்.
தொடக்கத்தில் சரியாக சோபிக்காத கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி இரண்டு மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, கடைசிப் போட்டியில் உர்வில் பட்டேல் என வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இன்னும் மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெற முடியும். மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது 16 புள்ளிகள் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு 90 சதவிகிதம் உறுதியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. சென்னை அணியின் தற்போதைய ரன் ரேட் 0.185 ஆக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸைவிட (0.082) சிறப்பாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளைவிட மிகவும் குறைவாக உள்ளது. புள்ளிப்பட்டியலில் சமநிலையில் இருந்தாலும், அதிக ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி வெற்றிபெற வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஒருவேளை சென்னை அணி மூன்று போட்டிகளில் மூன்றிலுமே வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மே 15 ஆம் தேதி லக்னௌ அணிக்கு எதிராகவும், மே 18 ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராகவும், மே 21 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராகவும் சென்னை அணி விளையாடவிருக்கிறது.
7 ஆண்டுகளுக்குப் பின்னர் லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது போல கடைசி மூன்று போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றது.
லக்னௌ, மும்பை அணிகள் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Summary
As many as eight teams – the others being GT, RCB, SRH, PBKS, DC and KKR – are in the contention for the four play-off berths
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது: சிஎஸ்கே பயிற்சியாளர்

ப்ளே ஆஃப் செல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

பிளே ஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய லக்னௌ, மும்பை; விறுவிறுப்பாகும் ஐபிஎல் தொடர்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


