பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ்! பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுமா?

தோல்விகளால் துவளும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுமா? என்பதைப் பற்றி...

News image

ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா. - படம்: ஏபி.

Updated On :3 மே 2026, 10:14 am

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்வியால் துவளும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றிரவு (மே 2) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தொடர்ந்து விளையாடி சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - கார்த்திக் சர்மா அரைசதத்தால், இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வியுடன் 9-வது இடத்தில் பரிதாபமான நிலையில் -0.803 ரன்ரேட்டுடன் தவித்து வருகிறது.

சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், திலக் வர்மா, வில் ஜாக்ஸ் என அதிரடி வீரர்களும், பவுல்ட், பும்ரா, ஷார்துல் தாக்குர், தீபக் சாஹர் என சிறந்த பந்துவீச்சாளர்களும் இருந்து போட்டிகளில் வெற்றிபெற மும்பை அணி தடுமாறி வருகிறது.

பிளேஆஃப்க்குத் தகுதிபெறுமா மும்பை இந்தியன்ஸ்?

தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், மும்பை அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகத்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், நூலிழையளவில் இருக்கும் வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுமா மும்பை அணி? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கிறது.

பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடனும் பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முதல் நான்கு இடங்களில் தொடர்கின்றன.

மும்பை அணி வெறும் 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தகுதி பெறுவது உறுதியாகாது என்பதால், அவர்களின் தலைவிதி இனி அணியினரின் கைகளில் இல்லை. அவர்கள் 14 புள்ளிகளுடன் முடித்தாலும், மற்ற போட்டிகளின் முடிவுகளையே நம்பியிருக்க வேண்டியிருக்க சூழல் உருவாகியிருக்கிறது.

முன்னதாக, 2011, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே 14 புள்ளிகளுடன் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கின்றன.

2024-ல் பெங்களூரு அணி, ரன்ரேட் விகிதத்தின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பிடித்தது நினைவுகூரத்தக்கது.

இனி பிளே ஆஃப் சுற்றில் நீடிப்பதற்காகவே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இடத்தைத் தக்க வேண்டும் என்றும், குறிப்பாக தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்பதால் மும்பை எட்டுமா? என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Summary

IPL 2026, CSK vs MI: Hardik Pandya's Mumbai Indians can still make their way through to the playoffs despite their heavy eight-wicket defeat to the Chennai Super Kings on Saturday at the MA Chidambaram Stadium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.