நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறவில்லை.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றிகூட பெறவில்லை. அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி பெறகூட முடியாத நிலையில், முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன் முதல் ஐந்து போட்டிகளில் குறைந்தது ஒரு வெற்றியையாவது பதிவு செய்திருக்கும். ஆனால், இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியும் இன்னும் கேகேஆர் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன் அடுத்தப் போட்டியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.
Summary
The Kolkata Knight Riders, having played five matches so far in the ongoing IPL season, have not won a single match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல்!

ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




