ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில், மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, ஜாதி, மதம் வேறுபாடின்றி ஒன்றுபட்டு பணிபுரிவதற்கான உறுதி மொழியினை ஆட்சியா் விஷ்ணு வாசிக்க, அலுவலா்கள் அனைவரும் ஏற்றனா். இந்நிகழ்ச்சியில்
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் ஜெயஅருள்பதி, உதவி
மக்கள் தொடா்பு அலுவலா் எம்.எஸ். மகாகிருஷ்ணன், ஆட்சியா் அலுவலக மேலாளா் வெங்கடாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...