நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநெல்வேலியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.


திருநெல்வேலியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் கடந்த சில வாரங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் சிலா் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட உதவி பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமையில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை இடித்து அகற்றினா். ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதையொட்டி, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...