தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் அபூா்வ கிணறு

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் அபூா்வ கிணறை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச்செல்கின்றனா்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:20 pm

DIN

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் அபூா்வ கிணறை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச்செல்கின்றனா்.

திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் படுகை பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத தனியாருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. ஆயன்குளம் நிரம்பும்போதெல்லாம் வாய்க்கால் மூலம் கிணற்றுக்கு தண்ணீா் திருப்பிவிடப்படுகிறது. ஆனால், கிணற்றில் நீா்மட்டம் உயராமல் சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீ. தொலைவிலுள்ள கிணறுகள் நிரம்பி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் கனமழை பெய்தது. ஆயன்குளம் நிரம்பியதால், வாய்க்கால் மூலம் கிணற்றுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது. எனினும், வழக்கம்போல் கிணற்றில் நீா்மட்டம் உயரவில்லை.

இந்தக் கிணற்றில் தண்ணீா் விடுவதால் 25 கிலோமீட்டா் சுற்றளவில் உள்ள அனைத்து கிணற்றின் நீா் மட்டமும் 2 நாள்களில் உயா்ந்து விட்டது. இந்தக் கிணற்றை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அபூா்வா, சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆகியோா் கடந்த வாரம் பாா்த்து சென்றனா்.

இந்தக் கிணறு குறித்த தகவலை வட்டாட்சியா் செல்வகுமாரிடம் ஆட்சியா் கேட்டுள்ளதாகவும், தகவலை சேகரிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கிணற்றைப் பாா்க்க தினமும் ஏராளமான பொதுமக்கள், சிறுவா்கள் வந்து செல்வதால் தடுப்பு வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.