சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, கல்லூா் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (டிச.18) மின் விநியோகம் இருக்காது.


சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (டிச.18) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், கரிசல்பட்டி துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலக்கல்லூா், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூா், சங்கன்திரடு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...