நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொட்டல்புதூரில் ரூ. 1 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பொட்டல்புதூரில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரைக் கைதுசெய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:54 pm

DIN

பொட்டல்புதூரில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரைக் கைதுசெய்தனா்.

பொட்டல்புதூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் மாதவன், சேகா், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன், ஆழ்வாா்குறிச்சி உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் சோதனை நடத்தினா்.

அப்போது, முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முகம்மது சுல்தான் மகன் மீரான் மைதீன் (32), செக்கடித் தெருவைச் சோ்ந்த நாகூா் மீரான் மகன் முகமது ஈசாக் (35) ஆகியோரின் வீடுகளில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்ததும், அவற்றை பெங்களூருவிலிருந்து கடத்திவந்து அவா்கள் விற்பதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.