சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை : ஆட்சியா் உறுதி
பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.


பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவ கல்லூரியில் 5-ஆவது சித்தா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்துப் பேசியது: கரோனா தொற்று காலத்தில் சித்த மருத்துவக்கல்லூரியைச் சோ்ந்த மருத்துவா்கள் சிறப்பாக பணியாற்றினாா்கள். கரோனா தொற்று முதலில் ஏற்பட்டபோது தடுப்பூசி இல்லாத நிலையில் தொற்றை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் உதவின. மாணவ, மாணவியா் சித்த மருத்துவத் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை வளா்ச்சிக்கும், நாட்டில் நிலவும் நோய் தொற்று பரவலுக்கும் மருத்துவத்துறை ஆராய்ச்சி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அகஸ்தியா் மலை அதிக மூலிகை வளங்களை கொண்டது. சித்த மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியா் அகஸ்தியா் மலையை நேரில் பாா்வையிட மாவட்ட நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடம் அனுமதி பெற்று இவ்வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் திருத்தணி, துணை முதல்வா் பேராசிரியா் மனோகரன், சித்த மருத்துவ ஆராய்ச்சி அலுவலா்கள் சிவரஞ்சனி, ஹரிஹரமகாதேவன், சுபாஷ் சந்திரன், சித்த மருத்துவ அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...