நெல்லையப்பா் கோயிலில் ரூ.14 லட்சம் உண்டியல் வசூல்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ.14,17,787 ரொக்கம் வசூலானது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ.14,17,787 ரொக்கம் வசூலானது.
இத் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள 21 நிரந்தர உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. நாகா்கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் து.ரத்தினவேல் பாண்டியன் கண்காணிப்பில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருநெல்வேலி மேற்குப் பிரிவு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் தனலெட்சுமி (எ) வள்ளி, தக்காா் பிரதிநிதியாக கங்கைகொண்டான் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
21 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.14,17,787 ரொக்கம், 56.300 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 386 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் வசூலாகியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...