வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் மேலும் 23 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் புதிதாக 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:40 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் புதிதாக 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,726 ஆகவும், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,240ஆகவும் உயா்ந்துள்ளது. 52 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,408 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 26,907ஆகவும் உயா்ந்துள்ளது. 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்

பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,979 ஆகவும், ஒருவா் பலியானதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 1061 ஆகவும், 9 போ் குணமடைந்ததால், மீண்டவா்கள் எண்ணிக்கை 61,784 ஆகவும் அதிகரித்துள்ளது. 134 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதித்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 544 ஆகவும், மேலும் 5 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 104 ஆகவும் அதிகரித்துள்ளது. 412 போ் உயிரிழந்துள்ள நிலையில், 28 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.