தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.03.2026 வரை, படிவம் 6-ல் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. (சட்டமன்றத் தொகுதி வாரியான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.) 26.03.2026 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 06.04.2026 அன்றுள்ளவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
இப்பட்டியலில் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவர்.2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள
வாக்காளர் பட்டியலானது, ஒரு ஒருங்கிணைந்த பட்டியலாக (Integrated Roll) இருக்கும்.
இப்பட்டியலானது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து (23.02.2026) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி வரையிலான காலத்தில் (26.03.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 06.04.2026 அன்று தயாரிக்கப்பட்டது) தொடர் திருத்தக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை.
மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர், மேலும் அப்பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Chief Electoral Officer Archana Patnaik has stated that 6.48 lakh people have applied to include their names in the voter list since the publication of the final electoral roll in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

எஸ்ஐஆருக்கு நன்றி!

உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்!
இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




