உத்தரப் பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில், சுமார் 2 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், மொத்தம் 13.39 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபர் மாதம் எஸ்ஐஆர் பணிகள் துவங்கியபோது 15.44 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் வெளியான முதற்கட்ட பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், தற்போது வெளியான உத்தரப் பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில், 7,30,71,061 ஆண் வாக்காளர்கள் (54.54%), 6,09,09525 பெண் வாக்காளர்கள் (45.46%) மற்றும் 4,206 மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 18 முதல் 19 வயதுடைய 17,63,360 புதிய வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன், கடந்த ஜனவரி மாதம் வெளியான முதற்கட்ட வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 84,28,767 வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக, உத்தரப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் அதிகப்படியாக பிரக்யாராஜ் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 3,29,421 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
20 million names have been removed from the final voter list of Uttar Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!
‘வாக்காளர் வழிகாட்டி’ தளம்! என்னவெல்லாம் அறியலாம்?

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


