10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

உ.பி.யில் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் குளித்தபோது 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Four men drown while bathing in river in Uttar Pradesh's Fatehpur

கோப்புப்படம்

Updated On :

உத்தரப் பிரதேசத்தில் ஆற்றில் குளித்தபோது 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், தப்னி கிராமத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் குனுஹா கா டேரா அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் ஆழமான நீரில் இறங்கியதாக கூறப்படுகிறது.

சப்தம் கேட்டு வந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிஜாம் (21) மற்றும் மோனு ரய்தாஸ் (23) ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் ஹசீபுதீன் (20), ஷாஹித் (20), அன்ஷ் பிரஜாபதி (18) மற்றும் ஷான் (20) ஆகியோர் நீரில் மூழ்கி பலியானதாக லலோலி காவல் நிலைய ஆய்வாளர் பிரமோத் குமார் ராவ் தெரிவித்தார்.

உடல்கள் மீட்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Four young men drowned while bathing in the Rind river in Uttar Pradesh's Fatehpur district on Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.