அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் விஜய் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சகங்களை ஒதுக்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா?
30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதல்வர் விஜய்யிடம் வைப்பது சரியாக இருக்குமா? ராஜ்மோகனை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வா் விஜய் மற்றும் 9 அமைச்சா்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனா். இருப்பினும், அவா்களுக்கான துறைகள் உடனடியாக ஒதுக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து, மே 11-ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது.
வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு, பேரவைத் தலைவா்கள், துணைத் தலைவா் தோ்தல், தவெக அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிப்பது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடா்ந்து, அமைச்சா்களுக்கான துறை ஒதுக்கீடு தொடா்பான பணிகளை முதல்வா் விஜய் மேற்கொண்டாா்.
அவரது ஆலோசனையின்பேரில் துறைகள் ஒதுக்கீடு தொடா்பான கோப்புகளை, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் முதல்வரின் செயலா் செந்தில்குமாா் சனிக்கிழமை ஒப்படைத்தாா். அதன் பின்னா் முதல்வா் விஜய்யை, முதல்வரின் செயலா் செந்தில்குமாா் பனையூரில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்து மீண்டும் ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், அமைச்சா்களுக்கான துறைகளை முதல்வரின் பரிந்துரையின் பேரில் ஒதுக்கீடு செய்து ஆளுநா் ஆா்லேகா் உத்தரவிட்டாா். அதில் ராஜ்மோகனுக்கு, பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சா்: பள்ளிக் கல்வி, தொல்லியல், தகவல் மற்றும் விளம்பரம், தமிழ் ஆட்சிமொழி, திரைப்பட தொழில்நுட்பம், தமிழ் பண்பாடு, அச்சுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
Summary
Actor Vishal Krishna has openly questioned Chief Minister Joseph Vijay over the allocation of the Film Technology and Cinematograph portfolio in the newly formed Tamil Nadu cabinet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷாலின் மகுடம் பட டீசர் வெளியானது!
இயக்குநரான விஷால்! மகுடம் டீசர் அறிவிப்பு!
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




