வாக்காளர்களுக்கு உதவும் வகையில் ’வாக்காளர் வழிகாட்டி’ என்ற வலைதளத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு உதவும் வகையில் ’வாக்காளர் வழிகாட்டி’ (VoterVazhikatti) என்ற வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தளத்தை அணுக - votervazhikatti.tn.gov.in
இந்த வலைதளத்தில் வாக்காளர்களுக்கு தேவையான மற்றும் அறிய வேண்டிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், முதல்முறை வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? வாக்குச் சாவடிக்குள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.
வாக்குச் சாவடிகளை அறிய, மாவட்டம், தொகுதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு, தொகுதியை அறிந்து கொள்ளலாம்.
மேலும், வாக்குச் சாவடியில் என்னென்ன அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும், தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவையும் தெரிந்து கொள்ளலாம்.
Summary
The ‘Voter vazhikatti’ Portal! What Can You Find Out?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா சொல்லித் தருகிறது!

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க.. புதிய விதிமுறை!
தேவை வாக்காளரியல் படிப்பு!

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள்: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



