ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பஞ்சதந்திரம் 2 எப்போது? நடிகர் ஜெயராம் பதில்!

பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ஜெயராம் கூறியிருப்பதாவது...

News image

பஞ்ச தந்திரம் படக்குழுவினர். - ENS

Updated On :29 மே 2026, 6:41 pm IST

நடிகர் ஜெயராம் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை இருவர் இல்லாமல் எடுக்கவே முடியாது” எனக் கூறியுள்ளார்.

கமல் எழுதிய கதையில் கிரேஸி மோகன் வசனத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் படம் 2002ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யுகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, தேவையானி, நாகேஷ் என பலர் நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்திற்கென தமிழில் தனித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஜெயராம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஊர்வசியுடன் இணைந்து பரிமளா அண்ட் கோ எனும் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் ஜெயராம் பஞ்சதந்திரம் 2 படம் குறித்து பேசியிருப்பதாவது:

பஞ்சதந்திரம் இரண்டாம் பாகத்தை எடுக்கும்படி கமலிடம் கூறும்படி என்னிடம் பலரும் சொல்லுவார்கள். நானும் அதைச் செய்வேன். ஆனால், கமலுமே அதைச் செய்ய நினைத்தாலும் நாகேஷ், கிரேஸி மோகன் என்ற முக்கியமான இருவருக்கான மாற்றை எங்களால் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மாற்று நடிகர்களைக் கண்டுபிடிக்கலாம்; ஆனால், அந்த இருவருக்கு மாற்றே இல்லை என்றார்.

Summary

Jayaram opens up on the possibility Panchatanthiram 2: 'We can't find...'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.