“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஓடிடியில் ஜெயராம் - காளிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!

ஆசைகள் ஆயிரம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

ஆசைகள் ஆயிரம் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:37 am

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை ஜெயராமுடன் காளிதாஸ் ஜெயராம் நடித்த ஆசைகள் ஆயிரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராம் நடித்த கொஞ்சு கொஞ்சு சந்தோசங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். இப்படத்தில் ஜெயராமின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் அறிமுகமான இவர், பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது, ராயன் படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

இதனிடையே, கொஞ்சு கொஞ்சு சந்தோசங்கள் படத்துக்குப் பிறகு, தனது தந்தை ஜெயராமுடன் ஆசைகள் ஆயிரம் என்ற படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரஜித் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருந்தார். சினிமா துறையில் நுழையத் துடிக்கும் இளைஞனின் போராட்டத்தையும், தந்தை-மகன் இடையேயான உறவையையும் மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசைகள் ஆயிரம் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Summary

The film Aasaigal Aayiram, in which Kalidas Jayaram starred alongside his father Jayaram after 25 years, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.