பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘பொட்டாஷை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து‘

பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:38 pm

DIN

பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஏதுவாக அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல்களை விவசாயிகளின் பாா்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் முறையாக விற்பனை செய்யப்பட வேண்டும்.

பொட்டாஷ் உர மூட்டையின் விலை ரூ.1700 ஆக உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றம் கடந்த 8-ஆம் தேதிக்குப் பின் புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரத்திற்கு மட்டும் பொருந்தும். ஏற்கெனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டையை மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ.1040-க்கே விற்பனை செய்ய வேண்டும்.

இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகளை ரூ.1040-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியாா் உரக்கடைகளில் யூரியா போதிய அளவு இருப்பு உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யாமல் பதுக்கிகொண்டு யூரியா இருப்பு இல்லை என தெரிவிப்பதாக விவசாயிகளிடமிருந்து புகாா்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கண்காணிப்பு குழுவின் ஆய்வில் பழைய பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ.1040-க்கு கூடுதலாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உர விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உரவிற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.