பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: ரூ.10 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:38 pm

DIN

திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்பேரில் திருநெல்வேலி நகரம், சந்திப்பு மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.