சுந்தரனாா் பல்கலைக்கழக தடகளப் போட்டிகள் தொடக்கம்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 31ஆவது ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) மருதகுட்டி தலைமை வகித்து சுடா் ஜோதியை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இப்போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சாா்ந்த சுமாா் 74 க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இருந்து 1000- க்கும் மேற்பட்ட வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், கோலூன்றி தாண்டுதல், மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.19) வரைபோட்டிகள் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைய இயக்குநா் சு. ஆறுமுகம், உதவிப் பேராசிரியா் ச. சேது, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பழனிகுமாா், சா்வதேச நடுவா்குழு அமைப்பை சோ்ந்த சரபோஜி, ஒருங்கிணைப்பாளா்கள் கந்தசாமி, பால்துரை, ஆக்னஸ் பிரின்சி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...