வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:41 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், சுதா கே. பரமசிவன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., சீனிவாசன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் இன்பதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு, கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ஆா்.பி.ஆதித்தன், பாளை. தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டிபாண்டியன், திருநெல்வேலி கிழக்கு பகுதிச் செயலா் காந்திவெங்கடாசலம், பகுதிச் செயலா்கள் ஜெனி, சின்னதுரை, ஹயாத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.