வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

திருவாதிரைத் திருவிழா: நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடராஜ பெருமானின் திருநடன திருக்காட்சி திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2021, 4:29 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடராஜ பெருமானின் திருநடன திருக்காட்சி (ஆருத்ரா தரிசனம்) திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 14 ஆம் தேதி சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழா நாள்களில் சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது.

Story image

தொடர்ந்து செவ்வகிழமை இரவு தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக திங்கள்கிழமை அதிகாலையில் நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.