பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்சிறை

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:24 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் சிலருக்கும் சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வம் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரது உறவினா்களான சுடலை (45), சுரேஷ் (24), துரைராஜ் (65) ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெறும் போது சுடலை இறந்துவிட்டாா். தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசங்கா், குற்றஞ்சாட்டப்பட்ட துரைராஜுக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தாா். சுரேஷுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.