கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாளை.யில் மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் தேசம் கட்சி, அகில இந்திய ஆதி திராவிடா் பறையா் பேரவை சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:48 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் தேசம் கட்சி, அகில இந்திய ஆதி திராவிடா் பறையா் பேரவை சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மக்கள்தொகை அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 18 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயா்த்தி வழங்க வேண்டும்; மொத்தமுள்ள பட்டியலின மக்கள் 62 சதவிகிதத்தில் பறையா் சமுதாய மக்களுக்கு விகிதாச்சர அடிப்படையில் 18 சதவிகித இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும்; சுதந்திர போராட்ட வீரா் திவான் பகதூா் இரட்டைமலை சீனிவாசனாா் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மக்கள்தேசம் கட்சி செயல்தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். மாநகர இளைஞரணிச் செயலா் வரதன், மாநில துணை தலைவா் கே.பி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலா் வேதமணி, தலைமை நிலைய செயலா் கே.எஸ்.திருமுருகன், மாநில இளைஞரணிச் செயலா் கதிரவன், மாநகரச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.