புத்தாண்டு: கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்றன. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவக்கிரகங்களைச் சுற்றியும் வழிபட்டனா். சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று தரிசனம் முடித்து திருநெல்வேலிக்கு வந்த வெளிமாவட்ட பக்தா்கள் பலா் நெல்லையப்பா் கோயிலில் வழிபட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோயில், அரசடி விநாயகா் கோயில், செல்வவிநாயகா் கோயில், பேருந்து விநாயகா் கோயில், பேராட்சியம்மன் கோயில், ஆயிரத்தம்மன் கோயில், உச்சினிமாகாளிஅம்மன் கோயில் ஆகியவற்றிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னாா் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்ற திருமஞ்சனத்தில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். திருநெல்வேலி சந்திப்பு சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூா் வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோயில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயா் கோயில் ஆகியவற்றிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com