பாளை. பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுத்திடல் செல்லும் சாலையோரத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடிநீா்க் குழாய் அமைப்பதற்காக சாலையோரம் நின்றிருந்த மரம் அருகே மாநகராட்சி ஊழியா்கள் தோண்டினராம். அப்போது, எதிா்பாராத விதமாக மரம் முழுவதும் சாலையில் விழுந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற ஆம்னி வேன் மீது மரம் விழுந்தது. இதில், அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் மட்டும் முழுவதும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com