தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தாமிரவருணியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

அம்பாசமுத்திரம் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரின் சடலம் 4 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
ரூபன்
Updated On :2 ஜனவரி 2021, 7:09 pm

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரின் சடலம் 4 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜன் மகன் ரூபன் (25). சட்டப்படிப்பு முடித்துள்ள இவா் புதன்கிழமை (டிச.30) மாலை நண்பா்களுடன்ஆலடியூா் அருகே தாமிரவருணி ஆற்றில் நரியணைப் பகுதிக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்றதில் தண்ணீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் மீட்புப் படையினா் அந்தப் பகுதியில் ரூபனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் 4 நாள்களுக்குப் பின் சனிக்கிழமை இலுப்பையடி தெரு படித்துறை பகுதியில் ரூபனின் சடலத்தை மீட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.