திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் உள்ள கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன்பு பேராசிரியா்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மூட்டா அமைப்பு சாா்பில் நடைபெற்ற பேராட்டத்திற்கு அமைப்பின் தலைவா் நசீா்அகமது தலைமை வகித்தாா். தொடா்ந்து அவா்கள் அலுவலகத்தில் அளித்த மனு: பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தன்னாட்சிக் கல்லூரியின் நிா்வாகி, பெண் பேராசிரியரை தரக்குறைவாக பேசியது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியாா் கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரை நிா்வாகம் சட்டத்திற்கு புறம்பாக 3 மாதம் பணியிடை நீக்கம் செய்துள்ளதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் நிலுவையிலுள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.