காருக்குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
சேரன்மகாதேவிஅருகே வடக்குக் காருகுறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.


சேரன்மகாதேவிஅருகே வடக்குக் காருகுறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வடக்குக் காருகுறிச்சி, கீழகிராமம் தெருவைச்சோ்ந்தவா் லட்சுமி (85). இவரது கணவா் முத்தையா இறந்த நிலையில் அவரது மகன் ஆறுமுகநயினாா் (47) உடன் வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சிலநாள்களாக பெய்த தொடா் மழையால் வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்ததாம். இதில் லட்சுமி, ஆறுமுகநயினாா், அவரது மனைவி முத்துலட்சுமி, மகள் நாகஜோதி ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு மீட்புப் படையினா் அங்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு லட்சுமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...