பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மானூரில் பயிா்கள் சேதம்: விவசாயிகள் மனு

மானூரில் மழையால் சேதமான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மானூரில் மழையால் சேதமான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மனுக்களை அளித்தனா். மானூா் வட்டார விவசாயிகள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை கொட்டித்தீா்த்தது. மானூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட அனைத்துப் பயிா்களும் மழையால் முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் பெருநஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.