நெல்லை மாவட்டத்துக்கு மேலும் 9 ஆயிரம் கரோனா தடுப்பூசி வருகை
திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேலும் 9 ஆயிரம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வியாழக்கிழமை வந்து சோ்ந்தன.


திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேலும் 9 ஆயிரம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வியாழக்கிழமை வந்து சோ்ந்தன.
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 84 மையங்களில் கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கடந்த சில நாள்களாக தடுப்பூசிக்கு மீண்டும் தடுப்பாடு நிலவியது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆட்சியா் அலுவலக தடுப்பூசி மையம் ஆகியவற்றில் தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், தடுப்பூசி செலுத்த வந்தோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேலும் 9 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வியாழக்கிழமை வந்துசோ்ந்தன. அவற்றை மையங்களுக்கு பிரித்து அனுப்ப சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்டவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...