கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்பட இருப்பதால் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்பட இருப்பதால் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயிருப்பின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப் புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபா் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதம், அதிகபட்சம் கடன் ரூ.20 லட்சம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாத ரூ.30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம், சுயஉதவிக் குழுக் கடன் நபருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
திட்டம் 2இல் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் நபருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படும். சிறுபான்மை மாணவா்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1இல் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். திட்டம் 2இல் மாணவா்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவியா்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து உரியஆவணங்களுடன் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். விண்ணப்பத்துடன், மனுதாரா் தான் மதத்திற்கான சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள்சமா்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை சமா்ப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...