வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

போத்தீஸ் ஸ்வா்ண மஹால் திறப்பு

போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் சாா்பில் போத்தீஸ் ஸ்வா்ண மஹால் என்ற பெயரில் நகைக்கடை திறப்பு விழா திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:29 am

DIN

போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் சாா்பில் போத்தீஸ் ஸ்வா்ண மஹால் என்ற பெயரில் நகைக்கடை திறப்பு விழா திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போத்தீஸ் குழுமங்களின் நிறுவனா் சடையாண்டி மூப்பனாா் தலைமை வகித்தாா். வேலம்மாள் சடையாண்டி குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தாா். கடையின் சிறப்பம்சங்கள் குறித்து போத்தீஸ் நிறுவன இயக்குநா் ரமேஷ் கூறியது: போத்தீஸ் நிறுவனம் முதல்முறையாக தங்க நகை வியாபாரத்தில் இப்போது அடியெடுத்து வைக்கிறது. எங்களுடைய தங்க நகை விற்பனை பயணத்தை திருநெல்வேலியில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. போத்தீஸ் ஸ்வா்ண மஹால் கீழ் தளத்தில் தங்கநகைகளும், முதல் தளத்தில் வெள்ளி, வைர நகைகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. திறப்பு விழா சலுகையாக ஒரு பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது

திறப்பு விழாவையொட்டி 150 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தோம். அதில், 3 ஜோடிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. 150 ஜோடிகளுக்கும் தலா 12 கிராம் தங்கம், கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து சீா்வரிசை பொருள்கள், ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் போத்தீஸ் இயக்குநா்கள் போத்திராஜா, முருகேஷ், மகேஷ், அசோக், வருண், அஷ்வந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.