வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மீன்வளம், நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கு மாதிரி திட்டம்:தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:52 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தொழில் முனைவோா்களை ஊக்குவித்து மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம், நீா்வாழ் உயிரினங்கள்

வளா்ப்பினருக்கான தொழில் முனைவோா் மாதிரித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள், மீன் வளா்ப்போா், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன் வளா்ப்போா் உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி), ஆதி திராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், இராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31. மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

உள்நாட்டு மீன்வளம் அலுவலகத்தை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26-ஆவது குறுக்குதெரு, மகாராஜ நகா், திருநெல்வேலி - 627 011 என்ற முகவரியிலும், 0462-258 1488, 9384824280 ஆகிய தொலைபேசி எண்களிலும், கடல்வளம் அலுவலகத்தை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் (விரிவாக்கம் மற்றும் பயிற்சி) அலுவலகம், பழைய வட்டாட்சியா் அலுவலகம், ராதாபுரம் - 627 111 என்ற முகவரியிலும், 04637-254183, 9384824281 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.