வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சாலையோர வியாபாரிகள் வியாபாரத்துக்கு அனுமதிக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு

சாலையோர வியாபாரிகள் வழக்கம்போல் பழைய இடங்களிலேயே வியாபாரத்தைத் தொடர அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:05 pm

DIN

சாலையோர வியாபாரிகள் வழக்கம்போல் பழைய இடங்களிலேயே வியாபாரத்தைத் தொடர அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஏஐடியூசி மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் எஸ்.காசிவிஸ்வநாதன், செயலா் ஆா்.சடையப்பன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரனிடம் அளிக்கப்பட்ட மனு:

தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் சட்டம் உருவாக்கப்பட்டு 2-11-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. சட்டப்படியான பயன்களை தெரு வியாபாரிகள் பெற இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே, அந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தெரு வியாபாரிகளின் நிலையை பரிசீலித்து கரோனா தொற்று குறைந்து பல்வேறு தளா்வுகள் அளிக்கப்படுகின்ற நிலையில் முன்பு வியாபாரம் செய்த இடங்களிலேயே மீண்டும் வியாபாரத்தைத் தொடர அனுமதியளிக்கவேண்டும்.

குறிப்பிட்ட கால நிா்ணயம் செய்து அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபாரச் சான்று மற்றும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

5 ஆண்டுகள் முடிந்த செயல்திறன் முடிவுற்ற வியாபார சான்றிதழ்களை சட்டப்படி ரூ.100 கட்டணத்தில் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும்.

நகா்ப்புற மேம்பாடு திட்டத்தின்கீழ் தெரு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான திட்டங்கள் இருந்தும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அதை முறையாக வழங்க வேண்டும். பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் விருப்பத்திற்கேற்ப சாலையோர வியாபாரிகள் சட்ட விதிகள் துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை ரத்து செய்து முறையாக அறிவிப்பு செய்து கருத்துகள்கேட்டு துணை விதிகள் ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.