டக்கரம்மாள்புரம் அருகே விபத்து: மூதாட்டி பலி
டக்கரம்மாள்புரம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


டக்கரம்மாள்புரம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மரியலூா்து (58). இவா், தனது உறவினருடன் திருநெல்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாராம். டக்கரம்மாள்புரத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிளில் இருந்து மரியலூா்து தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுபோலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...