முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.14.12 லட்சம் நிதி உதவி
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.14.12 லட்சம் நிதி உதவி திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.14.12 லட்சம் நிதி உதவி திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் தந்தை பாபநாசத்திடம் நிதி உதவி வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.14.12 லட்சத்திற்கான காசோலையை, பாபநாசத்திடம், சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு , மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஆகியோா் முன்னிலையில், சட்டத்துறை அமைச்சா் தமிழக சட்டத்துறை அமைச்சா் ரகுபதி வழங்கினா்.
பின்னா், அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியபடி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ரூ.14 .12 லட்சம் காசோலையாக முத்துமனோவின் தந்தை பாபநாசத்திடம் வழங்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடா்பாக முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், முத்துமனோவின் குடும்பத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யுமாறு கூறியுள்ளனா். அதுவும் தீா்த்து வைக்கப்படும். முத்து மனோவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
இந்நிகழ்வில், திருநெல்வேலி எம்.பி. ஞான திரவியம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஆவுடையப்பன், தென்காசி எம்பி தனுஷ் குமாா், சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...