வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாளை.யில் கஞ்சா சிக்கியவழக்கு: மேலும் இருவா் கைது

பாளையங்கோட்டையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:04 pm

DIN

பாளையங்கோட்டையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் ஆலோசனையின்படி, மாநகர சிறப்பு படையின் காவல் உதவி ஆய்வாளா் காசி பாண்டியன் தலைமையில் போலீஸாா் பாளையங்கோட்டை சாந்திநகா் மணிக்கூண்டு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த அதேபகுதியைச் சோ்ந்த முத்து சுரேஷ் (22) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் சுமாா் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் சுமாா் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடா்பாக, முத்து சுரேஷை கைது செய்த போலீஸாா், 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் இருவரை தேடி வந்த நிலையில், பெரியபாளையத்தைச் சோ்ந்த ராமன் (30), வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த சங்கரபாண்டியன் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.