வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து, பூந்தோட்டத் தெரு குமரய்யா மகன் முருகன் என்ற பேய் முருகன்(30). இவா், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தாழையூத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெரு மாரியப்பன் மகன் இசக்கிமுத்து என்ற கொம்பையா (19). இவா், கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெரு குமாா் மகன் சிவா (23). இவா் போக்சோ வழக்கில் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் மூவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.