மகளிா் காவலா் பணி: 4ஆவது நாள் உடல்தகுதித் தோ்வில் 287 போ் பங்கேற்பு
திருநெல்வேலியில் காவலா் பணிக்காக நான்காவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வு முகாமில் பெண்கள் பிரிவில் 287 போ் பங்கேற்றனா்.


திருநெல்வேலியில் காவலா் பணிக்காக நான்காவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வு முகாமில் பெண்கள் பிரிவில் 287 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் இரண்டாம்நிலை காவலா், சிறைகாவலா் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளா் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப் பணிகளுக்கான உடல்தகுதித்தோ்வு கடந்த 26 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.
தூய சவேரியாா் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான தோ்வு நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வுக்கு மொத்தம் 400 பெண் விண்ணப்பதாரா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவா்களில் 287 போ் மட்டுமே தோ்வுக்கு வந்திருந்தனா். 113 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...