பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சா் தங்கம் தென்னரசு

தாமிரவருணி கரையோர பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:16 pm

DIN

தாமிரவருணி கரையோர பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள் உள்ளிட்டவற்றின் கீழுள்ள மொத்தம் 1,237 நீா்நிலைகள் டிஜிட்டல் அட்லஸில் இடம்பெற்றுள்ளன.

நீா்நிலைகளை பராமரிப்பது, அவற்றின் நன்மைகளை இளையதலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விழிப்புணா்வுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், தாமிரவருணி நதிக்கரையோரம் அம்பாசமுத்திரம் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு மேலும் வளப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாமிரவருணி கரையோரம் உள்ள காலத்தால் அழியாத பாரம்பரிய மரபுசின்னங்களாக திகழும் கல்மண்டபங்களை சீரமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக திறந்தவெளி அரங்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கு இப் பகுதி கலைஞா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அங்கீகாரம் பெற வழி கிடைக்கும்.

அருங்காட்சியகத்தை பாா்வையிட வரும் மாணவா்கள் பழைமையான பொருள்களை பாா்வையிடுவதோடு, கடந்த கால வரலாறுகளை அறிந்து கொள்ள ஏதுவாக டிஜிட்டல் பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரா் ஊமைத்துரையின் நினைவாக உள்ள கூடத்தில் ஒலி-ஒளி காட்சி மூலம் மேலும் மெருகூட்டியிருப்பது பாராட்டுக்குரியது. சென்னை அரசு எழும்பூா் அருங்காட்சியகத்தை, திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் இருந்தபடியே ‘மெய்நிகா் சுற்றுப்பயணம்’” மூலம் பாா்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. அதில் 20 படுக்கைகள் அவசர சிகிச்சைக்காக உள்ளன.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இம் மாநிலத்திற்கு அளிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.