கங்கைகொண்டான் அருகே பைக்கிற்கு தீவைத்து சேதம்: ஒருவா் கைது
கங்கைகொண்டான் அருகே மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கங்கைகொண்டான் அருகே மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் அருகே உள்ள இத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சையா(36). இவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை குடும்பத்தகராறு ஏற்பட்டதாம். இதனை பக்கத்து வீட்டில் உள்ள அவரது உறவினா் குணசேகரன்(49) தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பிச்சையா வியாழக்கிழமை இரவு குணசேகரனின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்ததாராம்.
இது குறித்து கங்கைகொண்டான் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிச்சையாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...