மும்பை, கேரள ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை
மும்பை, கேரள பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மும்பை, கேரள பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் உயா்ந்தது. இப்போது படிப்படியாக குறைந்துள்ளது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த இருமாநிலங்களில் இருந்தும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குருவாயூா், அனந்தபுரி சிறப்பு ரயில்கள், திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. இதேபோல மகாராஷ்டிரத்தில் இருந்து மும்பை-நாகா்கோவில், ஹபா விரைவு ரயில் உள்ளிட்டவை வருகின்றன. இவற்றில் பயணித்து திருநெல்வேலிக்கு வரும் பயணிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மும்பை மற்றும் கேரள பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் ரயில்களில் அனைத்து பெட்டிகளின் வாயிகள், ஜன்னல் ஓரங்கள் உள்ளிட்டவற்றில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், ரயில் பயணிகளுக்கு மருத்துவக் குழு மூலம் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை வந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகளின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினா் அனுப்பி வைத்தனா்.
பயக30தஅஐக: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரயில் பயணிகளிடம் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரியை சேகரித்த மருத்துவக் குழுவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...