கராத்தே: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்பி பாராட்டு
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட மாணவா்-மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பாராட்டினாா்.


தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட மாணவா்-மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பாராட்டினாா்.
மாணவா், மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சாா்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாதெமி ஆப் டீம் 24 கராத்தே பயிற்சி பள்ளியை சோ்ந்த 10 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இப்போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தனா்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவா்- மாணவிகளையும், பயிற்சி ஆசிரியா் விஷ்ணுவா்தனையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் நேரில் அழைத்து பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...