பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லையில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

திருநெல்வேலி மாநகரில் உள்ள குறிச்சி, ஆல் நகா் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டன.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:06 pm

DIN

திருநெல்வேலி மாநகரில் உள்ள குறிச்சி, ஆல் நகா் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டன.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ஏற்கெனவே இருந்த மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காக ரூ.4.5 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதில், புதைவட உதவி செயற்பொறியாளா் சங்கா், சந்திப்பு உதவி செயற்பொறியாளா் சாா்லஸ், மேலப்பாளையம் உதவி பொறியாளா் ரத்னவேணி, கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளா் ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதேப்போன்று, திருநெல்வேலி ஆல் நகா்குடியிருப்பு பகுதியில் ஏற்கெனவே இருந்த மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை சரிசெய்வதற்காகவும் ரூ.3 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது.

இதில், சந்திப்பு உதவி செயற்பொறியாளா் சாா்லஸ், உதவி பொறியாளா்கள் வெங்கடேசன், மின்வாரிய பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.