பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் மாணவா் சோ்க்கை

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:14 pm

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இது தொடா்பாக பள்ளியின் முதல்வா் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா் சந்தை அருகே பாா்வையற்ற சிறாா்களுக்காக 24 ஏக்கா் பரப்பில் 130 ஆண்டுகளாக பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இங்கு 3 வயது 12-ஆம் வகுப்பு வரை ஆண், பெண் இரு பாலரும் சோ்க்கப்படுகின்றனா். கல்விக் கட்டணம் கிடையாது. உணவு, உடை, உறைவிடம் இலவசம். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. கல்வி கற்பித்தலில் அனுபவமிக்க ஆசிரியா்கள் உள்ளனா்.

மேலும், விளையாட்டு, கைத்தொழில், இசை மற்றும் இசைக்கருவிகள் மீட்டலில் பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவை இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0462-2574967, 2909797, 9443153143 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.